புடலங்காய் நெய்மீன்கருவாடு தொக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புடலங்காய்- 2 கப்

நெய்மீன் கருவாட் 2 துண்டு

தக்காளி-6

வெங்காயம்-3

பட்ட மிளகாய்- 2

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்

கடுகு-சிறிதளவு

கறிவேப்பிலை- 1 கொத்து

எண்ணெய்- 2 மேசை கரண்டி

செய்முறை:

புடலங்காயை தோல் நீக்கி வட்டவட்டமாக நறுக்கவும். கருவாடை சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து கருவாடை பொரித்து தனியாக வைக்கவும்.

அதே எண்ணெயில் கடுகு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, பட்ட மிளகாய் சேர்க்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் கருவாடு சேர்த்து கிளறிய பின் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதில் எல்லாத்தூளையும் சேர்த்து கிளறவும்.

பின்னர் புடலங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து குழைய வேக விடவும்.

இறக்கும் முன் உப்பு சரிபார்த்து தேவைபட்டால் சேர்க்கவும்.

குறிப்புகள்: