பீஸ் கபாப்
0
தேவையான பொருட்கள்:
பட்டாணி - ஒரு கப்
கடலைப் பருப்பு - ஒரு கப்
புதினா, மல்லி - ஒரு கட்டு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
மைதா - ஒரு கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கடலைப்பருப்பு, பட்டாணியை தனித்தனியாக வேகவைத்து இரண்டையும் சேர்த்து மைப்போல அரைத்துக் கொள்ளவும்.
மல்லி, புதினாவுடன், எலுமிச்சைச்சாறு, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து பருப்பு விழுதுடன் சேர்க்கவும்.
அதோடு 1/2 கப் மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து(தண்ணீர் சேர்க்காமல்)நீள நீளமாக சிலிண்டர் வடிவில் செய்து மீதி மைதாவில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.