பீர்க்கங்காய் தீயல்
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
முட்டை - ஒன்று
இறால் - 10
அரைத்த தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பீர்க்கங்காயை தோல் சீவி நடுவே கீறி அரைவட்ட துண்டுகளாக மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக சதுரமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாகில் கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப்போட்டு ப்ரவுன் நிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு பச்சைமிளகாய், கழுவி வைத்துள்ள இறால் போட்டு வதக்கவும். மேலும் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் நறுக்கிய காயை போட்டு வதக்கவும்.
பிறகு அரை டம்ளர் தண்ணீர் விட்டு மசாலா பொருட்கள், தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். பிறகு காய் வெந்ததும் முட்டையை கலக்கி அதில் பரவினாற் போல் ஊற்றவும். முட்டை வெந்தபின்பு இறக்கவும்.