பீட்ருட் பச்சடி (காரம்)
0
தேவையான பொருட்கள்:
பீட்ருட் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
முட்டை - இரண்டு
தேங்காய்ப்பால் - ஒரு மூடி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பீட்ருட்டையும், உருளைக்கிழங்கையும் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். முட்டையையும் வேக வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேகவைத்த பீட்ருட், உருளைக்கிழங்கு, முட்டை அனைத்தையும் தோலுரித்து பொடியாக நறுக்கவும். முட்டையை நறுக்கி தனியாக வைக்கவும்.
ஒரு கோப்பையில் முட்டையை தவிர எல்லாவற்றையும் போட்டு பாலையும் ஊற்றி நன்கு கிளறவும். தேவைப்பட்டால் உப்பு, புளிப்பு இன்னும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். பரிமாறும் போது மேலே பொடியாக நறுக்கிய முட்டையை தூவி பரிமாறவும்