பீஃப் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத பீஃப் - கால் கிலோ

கடலை பருப்பு - 100 கிராம்

இஞ்சி பூண்டு - ஒரு மேசைக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - மூன்று

தனியாத் தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

மிளகு தூள் - கால் தேக்கரண்டி

லெமென் ஜூஸ் - ஒரு பழ ஜூஸ்

வெங்காயம் - இரண்டு

துருவிய தேங்காய் - மூன்று பத்தை

முட்டை - ஒன்று

கொத்தமல்லி தழை - கால் கப் (பொடியாக நறுக்கியது).

செய்முறை:

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

எலும்பில்லாத பீஃப்பில் முதலில் பச்சை மிளகாயை அரைத்து ஊற்றவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து நல்ல வேக விடவும்.

வெந்ததும் தண்ணீரை வற்றவிட்டு அதில் ஊறிய கடலை பருப்பு, வெங்கயாம் பொடியாக நறுக்கியது, தேங்காய் துருவல் சேர்த்து நல்ல பிரட்டவும்.

இந்த கலவையை ஆற விடவும் ஆறியதும் கொஞ்ச கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

இப்போது முட்டை போட்டு கிளறி சிறிது நேரம் ஊறியதும் கலவை நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு வடை பொரிப்பது போல் வேண்டிய வடிவத்தில் பொரித்தெடுக்கவும்

குறிப்புகள்: