பீஃப் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீஃப் - கால் கிலோ (எலும்பில்லாதது)

தக்காளி - இரண்டு

மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

தயிர் - மூன்று மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிது மேலே தூவ

பட்டை - சிறிய துண்டு

எலுமிச்சை சாறு - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

பீஃப் கறியை சுத்தும் செய்து கழுவி தண்ணீர் வடித்து அதில் உப்பு, மிளகாய்தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், தக்காளி அனைத்தையும் போட்டு நன்றாக வேக வைக்கவும்.

வேக தாமதமாகும் குக்கரில் நான்கு விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் அதை தண்ணீர் வற்ற விடவும்

தண்ணீர் வற்றியதும் ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு பட்டை துண்டு போட்டு கறியை போட்டு நல்ல வறுக்கவும், பொன்வறுவல் வரும் போது கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.

குறிப்புகள்: