பீஃப் சுக்கா ப்ரை
தேவையான பொருட்கள்:
பீஃப் - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - எட்டு
எலுமிச்சை பழம் - நான்கு
மிளகு துள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - மூன்று தேக்கரண்டி (அ) தேவைக்கு
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கால் கட்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்
சீரக தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் (வறுத்து பொடி செய்து போட வேண்டும்)
எண்ணெய் + டால்டா (அ) பட்டர் - 75 மில்லி
செய்முறை:
பீஃப்பை சுத்தம் செய்து எலும்பில்லாதது அதில் உப்பு மஞ்ச பொடி, மூன்று எலுமிச்சை பழ சாறு பிழிந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பச்சை மிளகாயை நல்ல அரைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அதையும் சேர்த்து ஊற்ற வேண்டும்.
பிறகு மிளகு தூள், தனியாத்தூள், உப்பு தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் எல்லாம் போட்டு மீண்டும் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குக்கரில் இருபது நிமிடம் வேக வைத்து ஆவி அடங்கியதும் தண்ணீரை வற்ற விட வேண்டும்.
பிறகு தோசை தவ்வா (அ) நாண் ஸ்டிக் பேனில் எண்ணெய் + டால்டா ஊற்றி கறிவேப்பிலையும் சேர்த்து நல்ல வறுத்தெடுக்க வேண்டும்.
கடைசியில் கொத்தமல்லி தழை, மீதி உள்ள ஒரு எலுமிச்சையை பிழிந்து இறக்க வேண்டும்.