பிட்சா பன் (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
பன் - இரண்டு
பிட்சா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் - நான்கு தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
குடை மிளகாய் - ஒரு சிறிய துண்டு
துருவிய சீஸ் - இரண்டு மேசைக்கரண்டி
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பன்னை இரண்டாக பிரித்து பட்டரில் சூடுப்படுத்தவும்.
அதே தவாவில் கொஞ்சமாக பட்டர் போட்டு வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், உப்பு ஒரு பின்ச் போட்டு லேசாக வதக்கவும்.
இப்போது பன்னின் இருபுறமும் சாஸை தடவவும்.
அதன் மேல் வதக்கிய காயை வைத்து மேலே சீஸ் ஒரு தேக்கரண்டி வைத்து பரத்தி விட்டு மேலும் சிறிது சாஸ் தெளித்து பன்னை மூடவும்.
பிறகு நல்ல அழுத்தி விட்டு மைக்ரோவேவில் 10 செகண்ட் வைத்து எடுக்கவும்.
மைக்ரோவேவ் இல்லை என்றால் சூடான தோசை தவ்வாவில் வைத்து எடுத்தால் போதும்.
அருமையான பிட்சா பன் ரெடி.