பால் சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 2 டம்ளர்

கடலைபருப்பு- முக்கால் டம்ளர்

ஏலத்தூள்- கால் ஸ்பூன்

வெல்லம்-100 கிராம்

தேங்காய்- அரை மூடி

தாளிக்க

நெய்

முந்திரி

கிஸ்மிஸ்

ஏலக்காய்-2

செய்முறை:

கடலைபருப்பை 1 மணி நேரம் ஊற விடவும்

வெல்லத்தை பொடித்து நீர் ஊற்றி வெல்லப்பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும்

தேங்காயை மையாக அரைத்து வைக்கவும்

அரிசியையும் கடலைபருப்பையும் அலசி பாத்திரத்தில் வைத்து அதிக அளவு நீர் ஊற்றி நன்கு குழையவிடவும்

குழந்து வந்ததும் ஏலத்தூள்,வெல்லப்பாகு, தேங்காய் விழுது,சுவைக்கு தகுந்தபடி உப்பு சேர்த்து கிளறி பின் இறக்கவும்

நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் ஏலக்காய் தாளித்து அதில் சேர்க்கவும்.

பால்சோறு தயார்

குறிப்புகள்: