பால்வளைகாய்ச்சு
தேவையான பொருட்கள்:
வறுத்த அரிசி மாவு. - 1/2 கப்
சீனி - 3/4 கப் + 2 மேசை கரண்டி
நேந்திரம் வாழைபழம் - 2 பெரியது.
தேங்காய் பால் - 3 கப்
சாம்பார் வெங்காயம் - 5
நெய் - 50 கி
உப்பு = 1 சிட்டிகை
.
செய்முறை:
முதலில் அரைகப் தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். லேசாக கொதி வரும்போது அரை பின்ச் உப்பு, 2 டேபிள்ஸ்பூன் சீனியை போட்டு கரைந்ததும் மாவை மெதுவாக தூவி ஒரு மரக்கரண்டியால் கிண்டி இறக்கிவிடவும்.
மாவு ஆறியதும் ஒரு இன்ச் அளவிற்கு சிறிய கொழுக்கட்டைகளாக பிடித்து வைத்து கொள்ளவும்.
மீதி இருக்கும் தே.பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்
நேந்திரம் பழத்தை 2 இன்ச் துன்டுகளாக வெட்டி கொள்ளவும்
அடுப்பில் உள்ள பால் கொதித்ததும் கொழுக்கட்டைகளை மெதுவாக போட்டு வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து ஒரு கரண்டியால் லேசாக கிண்டி விடவும்.
அடுத்து பழத்துண்டுகளையும். சீனி, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
பத்து நிமிடங்களில் பழமும், கொழுக்கட்டையும் வெந்து கூழ் போலாகீருக்கும்
இப்பொழுது ஸ்டவிலிருந்து இறக்கிவிடவும்.
ஒரு சிறிய கடாயை அடுப்பில் சூடாக்கி நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சிவக்க பொரித்து பால்வளை காய்ச்சில் ஊற்றி பறிமாறவும்.