பால்ச்சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - கால் படி

சீனி - அரை படி

ஜவ்வரிசி - 50 மில்லி

சிறிய தேங்காய் - 1/2

வற்றிய பால் - கால் லிட்டர்

முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10

பன்னீர் - ஒரு ஸ்பூன்

ஏலக்காய் - 3

சோம்பு - கால் ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தேங்காயை திக்கான பால் பிழிந்துகொண்டு அதனுடன் வற்றிய பாலையும் சேர்த்து, ஏலக்காய், சோம்பு சேர்த்து பொடியாக்கி அதில் போட்டுக் கொள்ளவும்.

அரிசியை நன்றாக சிலிர்க்கும்படி வேகவைத்து, ஜவ்வரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் காய்ச்சி வெந்தவுடன் இரண்டையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.

பால் கலவையை வேகவைத்துள்ள அரிசி, ஜவ்வரிசி கலவையோடு ஊற்றி, அதனுடன் சீனியைக்கொட்டி அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறவும்.

பிறகு முந்திரி, கிஸ்மிஸை நெய்யில் வறுத்துப்போட்டு பன்னீர் சேர்த்து கூழ் பதத்திற்கு வரும்வரை கிளறவும்.

கூழ் பதம் ஆனவுடன் இறக்கி, சற்று ஆறியவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: