பார்டி சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

கேரட் - ஒன்று

வெள்ளரிக்காய் - முன்று

எலுமிச்சை - பாதி

மிளகு தூள் - அரை தாக்கரண்டி

உப்பு - தேவைக்கு

லெட்யுஸ் இலை - கொஞ்சம்

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

வெள்ளரிகாயையும், கேரட்டையும் தோலை செதுக்கி விட்டு, நான்கு காய்களையும் நன்கு கழுவி கொள்ளவும்.

எல்லாவற்றையும் வட்ட வட்டமாக நறுக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மிளகு தூள், உப்பு தூள் தூவி ஒரு வெள்ளை நிற தட்டில் முதலில் வெங்காயம், அடுத்து தக்காளி அடுத்து வெள்ளரிக்காய், கேரட், வெள்ளரிக்காய் இந்த மாதிரி வட்ட வடிவமாக அலங்கரித்து வைத்து மேலே லெட்யுஸ் இலையும், கொத்தமல்லி இலையும் தூவி பார்டியில் வைக்கவும்.

குறிப்புகள்: