பாதாம் பிர்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - அரை லிட்டர்

பாதாம் - நூறு கிராம்

சர்க்கரை - ஐம்பது கிராம்

கண்டென்ஸ்டு மில்க் மெயிட் - 150 மி.லி

சஃப்ரான் - அரை தேக்கரண்டி

மஞ்சள் கலர் பொடி - ஒரு பின்ச்

ரவை - மூன்று மேசைக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

பாதாமை ஒரு நாள் முன்பே ஊறவைக்க வேண்டும். அப்போது தான் நல்ல அதிக குவாண்டிட்டி கிடைக்கும். மறுநாள் நல்ல பெரியதாக கடலை ஊற போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

பாதாம் உடன் சஃப்ரான் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

பாலை நன்கு கொதிக்க விட்டு சிறிது வற்ற விட்டு அதில் சர்க்கரை, அரைத்த பாதாம் சேர்த்து காய்ச்சி மஞ்சள் கலர் பொடியை ஒரு மேசைக்கரண்டி பாலில் கரைத்து ஊற்றி காய்ச்ச வேண்டும்.

கடைசியில் ரவையை சிறிது சிறிதாக தூவி கிண்டி கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாகும் போது கண்டென்ஸ்ட் மில்க் ஊற்றி இறக்கவும். மில்க் மெயிட் ஊற்றியதும் அடிப்பிடிக்க ஆரம்பிக்கும் உடனே கிளறி இறக்கவும்.

கடைசியில் நெய் விட்டு இறக்கவும். எதுவும் தாளித்து போட வேண்டாம்.

குறிப்புகள்: