பாசி பருப்பு கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - ஒரு கப்

கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்

பால் பௌடர் - ஒரு கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

முந்திரிப் பருப்பு - 20

நெய் - 1/2 கப்

சீனி - 2 1/2 கப்

செய்முறை:

பாசிப்பருப்பை, பச்சை வாசனை போக இள வறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.

இதை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

தேங்காய்பால் சேர்த்து நன்றாக அரைக்கவும். முந்திரிப்பருப்பையும் சேர்த்து அரைக்கவும்.

ஒரு வட்டமான தட்டில் ஒரு ஸ்பூன் நெய்யை தடவவும்.

மீதி நெய்யை ஒரு அடிகனமான வாணலியில் ஊற்றவும்.

அரைத்த பாசிப்பருப்பு, பால் பௌடர், தேங்காய் துருவல், சீனி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, அடுப்பில் வைத்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறினதும், துண்டுகள் போடவும்.

குறிப்புகள்: