பாசிப்பருப்பு பொரித்த முட்டை செய்முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம்

தக்காளி - 1 (சின்னது)

வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மிளகாய் - 1

சில்லி பவுடர் - கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

சீரகத்தூள் - கால் ஸ்பூன்

மல்லி இலை - கொஞ்சம்

முட்டை - 2

மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -2

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாசிப்பருப்பை சிறிய தீயில் (3 நிமிடம்)சிவக்கக் கூடாது. லேசாக வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை பொடியாக கட் பண்ணி வைக்கவும்.

குக்கரில் பருப்பு, தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பாதி வெங்காயம், மிளகாய், அரை ஸ்பூன் நெய் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும். பருப்பில் ஒரு டம்ளர் வெண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.

ஒரு முட்டையுடன், வெங்காயம், மிளகுத்தூள், உப்பு, மல்லி இலை சிறிது கலந்து தோசை சட்டியில் நெய் விட்டு பொரித்து எடுக்கவும். சிறிய துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்.

ஒரு முட்டையை பீட் பண்ணி ஒரு பவுளில் வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கறிவேப்பிலை, கட் பண்ணிய பாதி வெங்காயம் தாளித்து குக்கரில் வேக வைத்த பருப்பை கொட்டவும்.

அந்த பருப்பில் பொரித்த துண்டு போட்ட முட்டையை சேர்க்கவும். பவுளில் உள்ள பீட் செய்த முட்டையை கொடி போல் ஊற்றவும். மூடி 5 நிமிடம் கழித்து சிம்மில் வைத்து திறக்கவும்.

சுவையும், மணமும் உள்ள பாசிப்பருப்பு,பொரித்த முட்டை ரெடி.

குறிப்புகள்: