பஷி ரிஹா (Bashi Riha)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் (பஷி) - 1/4 கிலோ

வெங்காயம் - 1

ஸ்மோக்டு டூனா மீன் துண்டுகள் - சிறிது (விரும்பினால்)

பூண்டு - 4 பல்

முதல் தேங்காய் பால் - 1/2 கப்

இரண்டாவது தேங்காய் பால் - 1 கப்

உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்

8. மிளகாய் + தனியா தூள் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கறீவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்தரிக்காய், மீன், தூள் வகை சேர்த்து பிரட்டி இரண்டாவது தேங்காய் பால் விட்டு மூடி வேக விடவும்.

குழம்பு நன்றாக கொதித்து சற்று கெட்டியாக துவங்கியதும் முதல் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

சுவையான பஷி ரிஹா தயார்.

குறிப்புகள்: