பரோட்டா சால்னா (சைவம்)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - அரை கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை:
பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, நடுத்தரமான கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
சுமார் அரை லிட்டர் தண்ணீரில் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், தேங்காய் விழுது, உப்பு, வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் அனைத்தையும் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், 1/3 பகுதி வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய்தூள் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து, மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி மூடி போட்டு, கிழங்கு வேகும்வரை வைக்கவும்.
கிழங்கு வெந்தவுடன் சிறிது தண்ணீரில் கடலை மாவை கரைத்து அதில் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது மிக சுலபமான சுவையான பரோட்டா சால்னா.