பரோட்டா சாண்ட்விச்
0
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 2
முட்டை - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு, மிளகு - தேவைக்கு
தக்காளி - 1 சிறியது
வெங்காயம் - 1
மிளகாய் - 1
வெள்ளரி - பாதி
லெட்டியூஸ் - 2 இலை
சாண்ட்விச் பேப்பர் - 4
செய்முறை:
பரோட்டா 2 தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, லெட்டியூஸ், மிளகாய், வெள்ளரி கட் செய்து கொள்ளவும்.
முட்டையை அடித்து அதனுடன். வெங்காயம், தக்காளி, மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து இரண்டாக சுட்டு எடுக்கவும்.
பின்பு பரோட்டாவில் முட்டை பொரித்ததை வைத்து அதன் மேல் லெட்டியூஸ், வெள்ளரி வைத்து சுருட்டி பரோட்டாவில் வைத்து இரண்டு பக்கமும் மடித்து வைக்கவும்.
இதனை சாண்ட்விச் பேப்பரில் வைத்து சுற்றி பரிமாறவும்.
இது சுவையானதும் சத்தானதும் கூட, இது அரேபிய நாட்டின் ரெஸ்டாரண்டில் பேச்சுலர்ஸ் விரும்பி உண்ணும் காலை உணவாகும்.