பரோட்டா கீமா (பாகிஸ்தான்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரோட்டா தயாரிக்க:

மைதா - மூன்று கப்

உப்பு - அரை தேக்கரண்டி

சோடா உப்பு - ஒரு பின்ச்

பட்டர் - மூன்று மேசைக்கரண்டி

பால் - கால் கப்

கீமா தயாரிக்க:

கீமா - கால் கிலோ

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

வெங்காயம் - ஐந்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 தேக்கரண்டி

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

சீரகத்தூள் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

தனியா தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேக்கரண்டி

செய்முறை:

மைதாவில் சோடா உப்பு, உப்பு, பட்டர், பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும்.

இப்போது நன்றாக ஊறவைத்த பரோட்டாமாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பரப்பி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை முழுவதும் தடவி புடவை கொசுவம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்க விடவும்.

எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்வறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய்,தக்காளியை போட்டு வதக்கவும். வதங்கியதும் எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும். கீமா ரெடி.

இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளையும் வட்ட வடிவ பரோட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரண்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது தான். எட்டு பரோட்டா வரும்.

குறிப்புகள்: