பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - நான்கு டம்ளர்

பால் - ஒரு டம்ளர்

டால்டா(அ) பட்டர் - ஒரு மேசைக்கரண்டி (உருக்கி கொள்ளவும்)

உப்பு - ஒரு தேக்கரண்டி

முட்டை - ஒன்று

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவில் உப்பு, முட்டை, உருக்கிய டால்டா, சர்க்கரை, பால் ஊற்றி ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி ஒரு கட்டை கரண்டியால் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு அடித்து பிசையவும்.

பிசைந்ததை ஒரு பெரிய லெமென் சைஸ் உருண்டைகளாக போட்டு ஒவ்வொரு உருண்டையிலும் சிறிது எண்ணெய் தடவி ஊற வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து நல்ல வட்ட வடிவமாக உருட்டி அரை சென்டிமீட்டர் அளவில் முன்னும் பின்னுமாக மடித்து கொண்டே வந்தால் நீளமாக இருக்கும் அதை சுருட்டி தட்டி வைக்கவும் மடித்ததும் உடனே தேய்த்தால் சுருண்டு கொண்டே போகும் மறுபடியும் வட்ட வடிவமாக தேய்க்க முடியாது.

ஒரு பத்து நிமிடம் கழித்து தேய்த்தால் நல்ல வட்ட வடிவத்தில் இதழ் இதழாக பிரிந்தாற் போல் வட்ட வடிவம் கிடைக்கும்.

இப்போது இதை தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எண்ணெயில் சிறிது டால்டா (அ) நெய் கலந்து இரு புறமும் தேய்த்து சுட்டெடுக்கவும்.

சும்மா பிஸ்கேட் மாதிரி பிய்த்து சாப்பிடலாம்.

குறிப்புகள்: