பராசப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை படி

தேங்காய் (சிறியது) - பாதி

முட்டை - 3

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

பெருஞ்சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

சோடாப்பு - அரை ஸ்பூன்

உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை 4 அல்லது 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு நன்றாக மை போல் அரைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் வரை அதை புளிக்க விட வேண்டும்.

நன்றாக புளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் ஒன்றாக நசுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

புளித்த மாவில் சோடாப்பு சேர்த்து கலக்கி, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். முட்டையை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு பெருஞ்சீரகத்தூள், அரைத்த தேங்காய், நசுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.

ஆப்ப சட்டியில் ஊற்றி, சிறிது நெய் விட்டு, பொன்முறுவலாக ஆனவுடன், திருப்பி போட்டு மீண்டும் சிறிது நெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து விடலாம்.

இது கோழி அல்லது கறி குழம்போடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: