பனீர் மட்டர் கீமா மசாலா
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா-100 கிராம்
பனீர்-50 கிராம்
பட்டாணி-50 கிராம்
பட்டை-1
ஏலக்காய்-2
கிராம்பு-3
சின்ன வெங்காய விழுது- கால் கப்
தக்காளி விழுது- கால் கப்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
சீரகத்தூள்- அரைஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1 1/2ஸ்பூன்
கரம்மசாலா தூள்- கால் ஸ்பூன்
தயிர்- கால் கப்
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் -2 மேசைகரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கைமா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சுருள சுருள வதக்கவும்.
இன்னொரு கடாயில் எண்ணெயில் பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிக்கவும்
பின் சின்ன வெங்காய விழுது,தக்காளிவிழுது, இஞ்சி பூண்டு விழுது 2 நிமிட இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்றாக போடவும்
பச்சை வாசனை போனதும் தூள் வகைகள் மற்றும் தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்
எண்ணெய் பிரிந்ததும் பனீர், கைமா, பாதி வெந்த பட்டணி சேர்த்து வதக்கவும்.
தேவைக்கு தகுந்தபடி நீர் தெளித்து மசாலா ஒன்றாக திரளும் வரை வேக விடவும்
பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.