பஜியா (Bajiyaa)
தேவையான பொருட்கள்:
மேல் மாவுக்கு:
மைதா - 2 கப்
உப்பு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஸ்டஃபிங் செய்ய:
ஸ்மோக்டு டூனா மீன் - 250 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
நீரை கொதிக்க வைத்து, மைதா மாவில் எண்ணெய் உப்பு கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
மீனை பொடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் பொடி வகை எல்லாம் சேர்த்து மீனும் சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக உப்பும், சர்க்கரையும் சேர்த்து 5 நிமிடம் கிளறி எடுக்கவும்.
மாவை மெல்லியதாக திரட்டி சமோசா செய்வது போல் செய்து மீன் கலவை சிறிது உள்ளே வைக்கவும்.
மேலே உள்ள மடிப்பை ஒட்ட சிறிது மைதாவை நீரில் கலந்து தடவவும்.
இதே போல் எல்லா மாவையும் செய்து ரெடியாக வைத்த பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சமோசா போல் பொரித்து எடுக்கவும்.
சுவையான பஜியா தயார்.