நோன்புகஞ்சி(கறி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குக்கரில் வேக வைக்க

கொத்துகறி - 100 கிராம்

பச்சரிசி நொய் - 1/2 டம்ளர்

பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்

சின்னவெங்காயம் - 10

பூண்டு - 10

இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 21/2 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பட்டைகிராம்பு ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

மல்லி இலை,புதினா - ஒரு கையளவு

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு - 2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

பட்டைவத்தல் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

அரைக்க

தேங்காய் 2 துண்டு

செய்முறை:

வேகவைக்க குடுத்தவைகளை குக்கரில் 7&8 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒருவில்விட்டு சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

தேங்காயை மிக்ஸியில் முக்கால் அரப்பாக அரைத்து வேகவைத்ததில் சேர்க்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளைப்போட்டு தாளித்து கொட்டவும்

குறிப்புகள்: