நொய் உருண்டை (இனிப்பு சோறு)
தேவையான பொருட்கள்:
தரமான பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்கு
வெல்லம் - ஒரு கப்
ஏலம் - மூன்று
உப்பு - இரண்டு பின்ச்
நெய் - அரை டீஸ்பூன்
தேங்காய் - அரை முடி (துருவியது)
செய்முறை:
அரிசியை பத்து நிமிடம் முன்பே ஊறவைத்து பிறகு அதை நொய் பதத்திற்கு கையால் பொடித்து களைந்து கொள்ளவும்.
வெல்லத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்ட வேண்டும்
குக்கரில் வடிகட்டிய வெல்ல தண்ணீரில் ஏலம், உப்பு,நெய், அரிசி போட்டு கொதிக்க விட வேண்டும்.
குக்கரில் மூடி போடாமல் கொதிக்க விடவேண்டும். பிறகு பாதி வெந்து வரும் சமயத்தில் மூடி போட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
இறக்கி ஆவி அடங்கியதும் ஒரு பெரிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறவிட்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்து கொண்டு கையை தண்ணீரில் முக்கிக்கொண்டு ஈர கையால் ஒவ்வொரு உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும்.
பிடித்து வைத்த உருண்டையின் மீது தேங்காய் பூவை தூவி தட்டை தூக்கி இரண்டு கையால் சுழற்ற வேண்டும் இப்போது தேங்காய் பூ உருண்டையில் ஒட்டிக்கொள்ளும்.