நெய் பத்திரி
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - 1/4 ஸ்பூன்
நெய் - ஒரு கப்
செய்முறை:
முதலில் தேங்காயையும், சின்ன வெங்காயத்தையும் ப்ளென்டரில் நன்றாக தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீரை காயவைத்து அதில் அரைத்த தேங்காய் வெங்காய விழுதை சேர்த்து கொதித்ததும் அரிசி மாவை சேர்த்து தீயை குறைத்து மரகரண்டியால் கிளறி சிறிது கட்டியாகும்பொழுது தீயை அணைத்து விடவும்.
மாவு லேசாக கை பொறுக்கும் அளவு சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
அதனை சின்ன சின்ன வட்டங்களாக உள்ளங்கை அளவுக்கு தேய்க்கவும் அல்லது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு அதன் நடுவில் மாவை வைத்து கையாலேயே சமமாக அழுத்தவும்.
இது 2 சப்பாத்தியை சேர்த்து வைக்கும் தடிமனில் இருக்க வேண்டும்.
பின்னர் நெய்யை காயவைத்து அதில் இந்த பத்திரிகளை பொரித்து எடுக்கவும்.