நெய் குஜிலி (1)
தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 4 கப்
நெய் - 100 கிராம்
பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 4 1/2 கப்
பால் - சிறிதளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை:
முதலில் மைதா மாவை சலித்து பாத்திரத்தில் கொட்டவும். கூடவே சமையல் சோடா, பால், சிறிது எண்ணெய், பால் பவுடரைக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக சிறுசிறு அப்பளம் போல் தட்டி வைக்கவும்.
ஒவ்வொரு அப்பளத்தின் நடுவிலும் கத்தியால் மூன்று இடத்தில் கீறவும். பின்னர் எண்ணெயில் சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைக்கவும்.
சர்க்கரை கரைந்து கம்பி பதத்தில் இறுகி வரும். அப்போது இறக்கி விடவும்.
அந்தப் பாகில் பொரித்த அப்பளங்களை ஒவ்வொன்றாக முக்கி எடுத்து அடுக்கவும். இதுவே நெய் குஜிலி.