நெத்திலி ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு - 1 பிடியளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்

தக்காளி பேஸ்ட் - 1ஸ்பூன்

உப்பு - தே.அளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

எண்ணெய் - சிறிது

செய்முறை:

கருவாட்டை சுத்தம் செய்து நன்றாக கழுவி வைக்கவும்.

வெங்காயம் & தக்காளியை பொடியாக நறுக்கவும்.

கருவாட்டுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தக்காளி பேஸ்ட்,உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

தண்ணீர் வற்றியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம் & தக்காளி போட்டு நல்லா வதக்கவும்.

எல்லாம் நல்லா பிரண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்புகள்: