நெத்திலி மீன் குழம்பு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - கால் கிலோ

பெரிய வெங்காயம் - நான்கு (பொடியாக நறுக்கியது)

பெரிய தக்காளி - ஐந்து (பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - நான்கு

புளி - ஒரு லெமென் சைஸ் (கெட்டியாக கரைத்தது)

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியாத்தூள் - அரை மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பூண்டு - ஐந்து பல் (தட்டியது)

செய்முறை:

மீன் கழுவும் விதம்:

பெரிய அலுமினிய கண் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

மீனை ஒரு சட்டி தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் களைந்து வடுகட்டியில் போடவும்.

சிங்கில் தண்ணீர் பைப்புக்கு நேராக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு, மூன்று தடவை கையால் அலசி கழுவவும். இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.

மீனின் தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விரலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.

அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.

இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

குழம்பு செய்யும் விதம்:

பெரிய அகலமான மீன் சட்டி (அ) நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயத்தை போட்டு பொரிந்ததும் பூண்டு, கறிவேப்பிலையை போட்டி சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.

புளி கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து மீனையும் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

மீனை கடைசியில் தான் போடனும் இல்லை என்றால் உடைந்து விடும்.

வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

நெத்திலி மீன் சால்னா ரெடி.

குறிப்புகள்: