நாரல் குர்மா
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 2
பாதாம் - 50கிராம்
பிஸ்தா - 50கிராம்
சாரபருப்பு - 50கிராம்
முந்திரி - 50கிராம்
சீனி - தேவைக்கு
நெய் - 3ஸ்பூன்
செய்முறை:
தேங்காயை துருவி 1- 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.
பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைத்து நீட்டமாக மெலிதாக நறுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பருப்புகளை வறுத்து எடுக்கவும்.
தேங்காய் பாலில் சீனி போட்டு கரைக்கவும்.
இதோடு வறுத்த நெய், பருப்புகளயும், போட்டு கலக்கி ஃபிரிஜில் 2 மணி நேரம் வைத்து பின்பு டம்ளரில் ஊற்றி பரிமாறவும்