நான ஹத்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 8 கப்

மைதா - 8 கப்

டால்டா - 700 கிராம்

பசுநெய் - 100 கிராம்

செர்ரி - 100 கிராம்

செய்முறை:

சீனியை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

பிறகு அரைத்த சீனி, மைதா, டால்டா, நெய் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து அச்சில் போட்டு நமக்கு தேவையான வடிவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அச்சில் போட்டு எடுக்கப்பட்ட வடிவங்களின் மீது செர்ரி பழங்களைப் பதித்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் மண் போட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடு வரும்வரை எரித்த பிறகு ஒரு தட்டையான சட்டியை மண்மேல் வைத்து செய்து வைத்துள்ள நானஹத்தாவை அதிலே எடுத்து வைக்கவும்.

சட்டியின் மேல் ஒரு மூடியை வைத்து அதில் நெருப்பு வளர்த்து, விசிறியால் அரைமணி நேரம் விசிறவும்.

பிறகு மூடியைத் திறந்துப் பார்த்து பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: