நர்கிசி கபாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்திய கறி - கால் கிலோ

மிளகாய் பவுடர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

தண்ணீர் - கால் கப்

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி

தக்காளி - ஒன்று

கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - அரை கிலோ

முட்டை - 4

செய்முறை:

உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து, தோலுரித்து, அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

கொத்தமல்லித்தழை, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

மூன்று முட்டையை நன்கு வேகவைத்து (அவித்து) எடுத்து, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

கொத்துக்கறியினை ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து சுமார் 6 அல்லது 7 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடேற்றவும்.

அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து சுமார் ஒரு நிமிடம் லேசாக வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு நறுக்கின தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கின கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.

பின்பு வேகவைத்த கறி, கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சிறிது நேரம் நன்கு வேக விட்டு இறக்கவும்.

வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை உள்ளங்கையில் பரப்பி, ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு வேகவைத்துள்ள கறி கலவையினை எடுத்து மத்தியில் வைக்கவும்.

அதனுடன், வேகவைத்து நறுக்கி வைத்துள்ள முட்டை துண்டு ஒன்றினை வைத்து, கொழுக்கட்டைக்கு பூரணம் வைத்து மூடுவது போல் மூடவும்.

இந்த உருண்டைகளை, அடித்து வைத்துள்ள முட்டை கருவில் நனைத்து, வாணலியில் கால் கிலோ எண்ணெய் விட்டு சூடானதும், அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: