தேங்காய் தண்ணீர் கடற்பாசி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - இரண்டு

தண்ணீர் - இரண்டு டம்ளர்

கடற்பாசி - ஒரு கைப்பிடி முழுவதும்

சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி

பாதாம் - நான்கு (தோலெடுத்து மெல்லியதாக நறுக்கியது)

செய்முறை:

இரண்டு தேங்காயை உடைத்து தண்னீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

தேங்காய் முழுவதும் பத்தைகளாக கீறி ஒரு கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து கொள்ள வேண்டும். தேங்காயை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எவ்வளவு நாள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

முதலில் தண்ணீரில் கடற்பாசியை ஒரு முறை கழுவி இரண்டு டம்ளர் தண்ணீரில் கடற் பாசியை போட்டு நன்கு கரையும் வரை கொதிக்க விடவும். தண்ணீர் கொஞ்சம் வற்றி கெட்டியாக வரும்.

கரைந்து வரும் போது சர்க்கரை, நறுக்கிய பாதாம், தேங்காய் தன்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும்.

கொதித்ததை ஒரு எவர் சில்வர் டிரே (அ) தட்டு (அ) டிபன் பாக்ஸில் ஊற்றி நன்கு ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து நோன்பு திறக்கும் வேலையில் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணி சாப்பிட வேண்டும்.

குறிப்புகள்: