தூனா மீன் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தூனா மீன் - ஒரு டின்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

எலுமிச்சைப்பழம் - இரண்டு கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - இரண்டு கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கவும். அதில் மிளகாய்தூளைப் போட்டு கிளறி தண்ணீர் வடித்து வைத்த மீனைக்கொட்டி கொஞ்ச நேரம் வதக்கவும். பின் எலுமிச்சைச்சாறு ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: