தூனா மீன் உருளை கட்லெட்
தேவையான பொருட்கள்:
தூனா மீன் - 1 சிறிய டின்
பெரிய உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
முட்டை - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி
கரம் மசாலா - 1 கரண்டி
ரொட்டித்தூள் - பிரட்டி எடுக்க தேவையான அளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
முட்டையை ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
டின்னை திறந்து அதில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்
ஒரு சட்டியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை லேசாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் போட்டு நன்கு வதக்கி மசித்து வைத்த கிழங்கு மீனை போட்டு பிரட்டி அடுப்பில் இருந்து இறக்கி விடவும் சிறிது நேரம் கழித்து தேவையான வடிவில் உருண்டையாகவோ கட்டமாகவோ செய்து முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து சூடாக பரிமாறவும்.