துருவிய கேரட் பொரியல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கேரட் - 300 கிராம்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - அரைஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மிளகாய்வற்றல் - 1

மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்

சில்லி பவுடர் - கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - 2 இணுக்கு

மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

கேரட் கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள், சில்லிபவுடர், துருவிய கேரட் சேர்த்து சிறிது வதக்கவும், உப்பு சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும். மல்லி இலை தூவவும்.

சுவையான துருவிய கேரட் பொரியல் ரெடி.

குறிப்புகள்: