திடீர் கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 10
கொத்துக்கறி - 200 கிராம்
வெங்காயம் (பெரியதாக) - ஒன்று
தக்காளி - மூன்று
பச்சைமிளகாய் - இரண்டு
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை - இரண்டு
எண்ணெய் - ஒரு கோப்பை
உப்பு - தேவையான அளவு
மல்லிக்கீரை - ஒரு கட்டு
செய்முறை:
கறியுடன் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
பரோட்டாக்களை பொடியாக கட் பண்ணி வைக்கவும். இல்லையென்றால் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றும் சுற்றிக் கொள்ளலாம்.
வெங்காயம், தக்காளி, மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை கலக்கி தனியாக கொத்தி பொரித்துக் கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம், தக்காளியை வதக்கவும் பின் கறியை போட்டுக்கிளறி அதில் பரோட்டாக்களை போட்டு கிளறி ஐந்து நிமிடம் வைத்து மேலே முட்டை, மல்லிக்கீரை தூவி சூடாக பரிமாறவும்.