தர்பூஸ் மாதுளை ஜுஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தர்பூசணி - பெரிய பழத்தில் (நாலில் ஒரு பாகம்)

மாதுளை - அரை பழம்

குளுக்கோஸ் - ஒரு மேசைக்கரண்டி

சர்க்கரை - தேவைக்கு

ஐஸ்கட்டிகள் - எட்டு

செய்முறை:

தர்பூசணியை அரிந்து கொட்டைகளை நீக்கி விட்டு, மாதுளை சுளைகள், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சிறிது, குளுக்கோஸ் சேர்த்து நன்கு மிக்ஸியில் ஓடவிட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.

சிறிது நேரம் கழித்து அடியில் மாதுளை கொட்டைகள் தங்கியிருக்கும். அப்படியே அடியோடு சேர்த்து கலக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து நோன்பு திறக்கும் போது குடிக்க வேண்டும்.

குறிப்புகள்: