தரி காய்ச்சியது
0
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
நெய் - ஒரு தேக்கரண்டி
பசும் பால் - 3 கப்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
வறுத்த ரவை - 2 தேக்ரண்டி
முந்திரிப்பருப்பு - 6
செய்முறை:
நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி (தீயை கம்மியாக வைக்கவும்) அதில் முந்திரியை போட்டு அது நிறம் மாறும் முன் நறுக்கின வெங்காயதை போட்டு பொன்முறுவலாகும் வரை வறுக்கவும்.
கருகி போய் விடாமல் பார்த்துக் கொள்ளவும். வெங்காயம் வறுபட்டு நல்ல மணம் வரத்தொடங்கும்போது பாலை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
பால் கொதிக்கும்பொழுது ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கொதிக்க விட்டதும் இறக்கவும்.