தயிர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 7 (சுமார் அரைகிலோ)
தயிர் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று பெரியது
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக அரிந்தது)
இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக சாப் பண்ணது)
பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக சாப் பண்ணது)
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி (அ) தேவைக்கு
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கன் லெக் பீஸை நன்கு கழுவி டீப்பாக நாலா பக்கமும் கீறி கொள்ளவேண்டும்.
தயிரில் மிளகாய் தூள், உப்பு தூள், தனியா தூள் போட்டு நன்கு கலக்கி வைக்க வேண்டும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பிறகு சிக்கனை சேர்த்து நல்ல ஹைய் பிளேமில் வைத்து வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு கலக்கி வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றி, தீயை கம்மியாக வைத்து நன்கு சிக்கன் வெந்து கிரிப்பாகியதும் இறக்க வேண்டும்.
இது பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.