தம்ரொட்
தேவையான பொருட்கள்:
ரவா - 5 கப்
சர்க்கரை - 600 கிராம்
நெய் - 400 கிராம்
பால் - 200 மி.லி.
பன்னீர் - 4 தேக்கரண்டி
முட்டை - 3
முந்திரிபருப்பு - 50 கிராம்
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவா, சர்க்கரை, நன்கு காய்ச்சிய பால், உடைத்து ஊற்றிய முட்டை ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்தகொள்ளவும்.
பிறகு அதிலேயே பன்னீர், நெய், முந்திரிபருப்பு, கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பதினைந்து நிமிடங்கள் அதனை ஊற வைக்கவும்.
ஒரு தட்டில் மண் போட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடு வரும்வரை எரித்த பிறகு ஒரு தட்டையான சட்டியை மண்மேல் வைத்து அதில் நெய் தடவி மாவை ஊற்றிக் கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் மண் போட்டு, நெருப்புத் துண்டங்களைப் பரப்பி அதனை மாவு ஊற்றிய பாத்திரத்தின் மீது மூடி வைக்கவும்.
சுமார் முப்பது நிமிடங்கள் கழிந்ததும் இறக்கி, ஆறவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் மாவினை நெய் தடவிய ஒரு ட்ரேயில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.