தந்தூரி இறால் டீப் ப்ரை
தேவையான பொருட்கள்:
இறால் - அரை கிலோ
தந்தூரி மசாலா - இரண்டு தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - இரண்டு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஆறு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
லெமென் ஜூஸ் - ஒரு பழம்
செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுத்து விட்டு நன்கு மஞ்சள் தூள் போட்டு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
முதலில் இறாலை லேசாக மஞ்சள் தூள், அரை லெமென் ஜூஸ் பிழிந்து சிறிது உப்பு போட்டு பிரட்டி கொள்ளவும்.
வாணலியில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிள்காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தந்தூரி மசாலா, சோம்பு தூள் போட்டு பிறகு இறாலை போட்டு நன்கு பிரட்டி மூடி போட்டு ஐந்து நிமிடம் விடவும்.
பிறகு தீயை அதிகப்படுத்தி உப்பு சேர்த்து அதில் நிற்கும் தண்ணீர் சுருண்டு ரெட் கலரில் முருக ஆரம்பிக்கும் போது மீதி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறி கடைசியில் மீதி அரை லெமென் ஜூஸ் பிழிந்து கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.