தட்டு ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - இரண்டு கப்

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு சட்டியில் 1 1/4 கப் தண்ணீரில், கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டு நெய் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் மாவை ஒரு கையால் போட்டுக் கொண்டே மறுகையால் ஒரு கட்டை கரண்டி வைத்து கிளறவும். கிளறி கொஞ்சம் நேரம் ஒரு ஈர துணியில் மூட்டைகட்டி வைக்கவும். பிறகு சிறிது நேரம் கழித்து அடுத்து லேசாக குழைத்து அதை பத்து உருண்டைகளாக்கவும்.

ஒவ்வொரு உருண்டையும் எடுத்து ஒரு சில்வர் தட்டை திருப்பி போட்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கொண்டு கையை அதில் முக்கிக்கொண்டு தட்டின் மேல் ஒரு கட்டமான மெல்லிய துணியை வைத்து அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கையால் வட்ட வடிவத்தில் அழுத்தவும்.

இப்போது தோசைகல்லை காய வைத்து தீயை குறைத்து கொண்டு தட்டிய ரொட்டியை துணியோடு போட்டு துணியை உடனே எடுத்து விடவேண்டும். எடுத்து இரண்டு பக்கமும் நெய் தடவி சாப்பிட வேண்டியது தான்.

குறிப்புகள்: