தக்காளி பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி - 4

நெய் - 2 தேக்கரண்டி

முந்திரி, திராட்சை - சிறிது

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று

பான்டன் இலை - சிறு துண்டு

சீனி - 10 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பான்டன் இலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு அதனுடன் தக்காளி சேர்த்துக் கிளறிவிட்டு மூடி போட்டு வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தக்காளியில் உள்ள தண்ணீரே போதும்).

தக்காளி நன்கு குழைய வெந்ததும் உப்பு மற்றும் சீனி சேர்க்கவும். இப்போது சற்று நீர்த்து இருக்கும். மீண்டும் வேகவிடவும்.

சீனி நன்றாக கரைந்து பாகு போல் பிசுபிசுவென்று தக்காளியுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான இனிப்பு தக்காளி பச்சடி தயார்.

குறிப்புகள்:

பிரியாணி, நெய் சாதம் சாப்பிட்ட பின்பு கடைசியாக சாப்பிடுவதற்கேற்ற நல்ல இனிப்பு பச்சடி இது. இதனுடன் சீனி தொவை என்ற சீனியில் செய்த தண்ணீருடன் வாழைப்பழம், எலுமிச்சை சாறு, பச்சடி ஆகியவற்றை நெய் சாதத்தில் சேர்த்து சாப்பிடுவார்கள். சுவை அபாரமாக இருக்கும்.