தக்காளி சூப்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
சீரகம் - 1ஸ்பூன்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 2பல்
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தே.அளவு
எண்ணெய் - தாளிக்க
தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
தக்காளியையும் சீரகத்தையும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
வெங்காயம்,மிளகாயை பொடியாகவும் பூண்டை வட்டமாகவும் அரிந்து கொள்ளவும்.
அரைத்த தக்காளியுடன் கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் பூண்டை பச்சையாக போடவும்.
அரிந்த மிளகாயையும் போடவும்.
தேவையான உப்பு & மஞ்சள் தூள் போட்டு கலக்கவும்.
ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு,மீதியுள்ள வெங்காயம்,பூண்டை போட்டு வதக்கவும்.
பின் அதில் கருவேப்பிலை போட்டு தாளித்து தக்காளி கலவையை ஊற்றவும்.
கலவை நன்றாக கொதித்து,தக்காளியின் பச்சை வாசனை போனவுடன் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.