தக்காளி சட்னி (1)
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி (ஆலிவ் ஆயிலும் உபயோகப்படுத்தலாம்)
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - நான்கு (பொடியாக அரிந்தது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முழுமிளகு -ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பழுத்த தக்காளி - நான்கு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - கொஞ்சம் மேலே தூவ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெயை காய வைத்து முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலையை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அப்படியே தனலில் (தீயை சிம்மில் வைக்கவும்).
தக்காளி நன்கு வெந்து எண்ணெய் மேலே மிதக்கும். அப்போது இறக்கி விடவும். கடைசியில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.