தக்காளி சட்னி
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
பல்லாரி வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
பெருங்காயம் - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தே.அளவு
எண்ணை - 2 மே.கரண்டி
செய்முறை:
ஒரு சட்டியில் எண்ணை ஊற்றி மிளகாய்,பெருங்காயம்,பூண்டு,கறிவேப்பிலை இவைகளை வறுத்துக் கொள்ளவும்.
இவைகளை எண்ணையை விட்டு எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
அதையும் எண்ணையை விட்டு எடுத்து ,மேலே வருத்த பொருள்களுடன் வைக்கவும்.
இறுதியில் தக்காளியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வதக்கிய அனைத்து பொருள்களையும் ஆறியவுடன் மிக்ஸியில் உப்பு போட்டு அரைக்கவும்.