தக்காளி கூட்டு
0
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி - 1
பல்லாரி வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தே.அளவு
செய்முறை:
தக்காளியை அடுப்பில் வைத்து சுட வேண்டும்.பிறகு அதன் தோலை உரித்து விடவும்.
காய்ந்த மிளகாயையும் சுட்டுக் கொள்ளவும்.
தக்காளியை நன்றாக பிசையவும்.
அதனுடன் பொடியாக நருக்கிய வெங்காயத்தை போடவும்.
சுட்ட மிளகாயை தக்காளியுடன் பிசைந்து விடவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.