டொமட்டோ பிரான்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் – அரைக்கிலோ

தக்காளி – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா –கால்டீஸ்பூன்

சில்லி பவுடர் – ஒன்னரை டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

மல்லி இலை – சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடியவிட்டு வைக்கவும்.

தண்ணீர் வடிந்த பின்பு இறாலுடன் ஒரு டீஸ்பூன் சில்லி பவுடர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ரெடி செய்த இறாலை சேர்த்து வதக்கவும், இறால் தண்ணீர் வற்றி ப்ரை ஆகி வரும்.

இறாலில் ஊறிய தண்ணீர் வற்றியவுடன் தக்காளியை பொடியாக நறுக்கியோ அல்லது கையால் பிசைந்தோ சேர்த்து, அரை டீஸ்பூன் சில்லி பவுடர், சிறிது உப்பு சேர்த்து மூடி விடவும்.

தக்காளி பச்சை வாடை மடங்கி இறாலுடன் சேர்ந்து ஒட்டியது போல் ஆகிவிடும்,மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான டொமட்டோ பிரான்ஸ் ரெடி.

இப்படி எளிமையாக ஒரு முறை செய்து பாருங்க அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: