டேங் கடற் பாசி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடற்பாசி - ஒரு கைப்பிடி அளவு

சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி

தண்ணீர் - இரண்டு டம்ளர்

டேங்க் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

பாதாம் - மூன்று

செய்முறை:

பாதாமை ஊற வைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

கடற்பாசியை தண்ணீரில் அலசி ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.

கரையும் போது சர்க்கரை, பொடியாக நறுக்கிய பாதாம், டேங்க் பவுடரை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி மீண்டும் நன்கு கொதிக்க விட்டு ஒரு எவர் சில்வர் கிண்ணம் (அ) டிரேயில் ஊற்ற வேண்டும். அப்போது தான் சூடு தாங்கும்.

ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து நோன்பு திறக்கும் போது வேண்டிய வடிவத்தில் கட் பண்ணி சாப்பிடவும்.

குறிப்புகள்: